சங்கரன்கோவில் அருகே போலீஸ் நிலையத்திற்குள் மோதல்; 2 பேர் கைது-விசாரணைக்கு வந்தபோது சம்பவம்
- சண்முகநாதன் சங்கரன்கோவிலை சேர்ந்த சகாயமேரி மீது போலீசில் புகார் அளித்தார்.
- சண்முகநாதன்,மணிகண்டனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் நில தகராறு சம்பந்தமாக சங்கரன்கோவிலை சேர்ந்த சகாயமேரி என்பவர் மீது சின்னகோவிலான்குளம் போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்த விசாரணைக்காக 2 தரப்பினரும் சம்பவத்தன்று போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது 2 தரப்பினரும் போலீஸ் நிலையத்திற்கு உள்ளேயே ஒருவரை ஒருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனை தடுக்க முயன்ற முதல்நிலை காவலர் அருணாசலம் என்பவருக்கு காயம் ஏற்பட்டது.
தொடர்ந்து அருணாசலம் அளித்த புகாரின் பேரில் போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக மணிகண்டன், சண்முகநாதன் மற்றும் சகாயமேரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் சண்முகநாதன் மற்றும் மணிகண்டனை போலீசார் உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.சகாயமேரியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.