உள்ளூர் செய்திகள்

சேந்தமங்கலம் எஸ். எஸ். வி. மேல்நிலைப் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டியது.

10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவு: சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி. பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி

Published On 2022-06-21 10:00 GMT   |   Update On 2022-06-21 10:00 GMT
  • 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவில் சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி. பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
  • அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை அறக்கட்டளை நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி :

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் அருகே சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி.மேல்நிலை பள்ளியில் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.3 சதவீத மாணவ மாணவிகளும்,10-ம் வகுப்பில் 100 சதவீத மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த பள்ளியில்12-ம் வகுப்பில் தேர்வு எழுதிய 140 பேரில் 139பேர் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் இதில் கண்மணி 579 மதிப்பெண்களும் மோகனா 575 மதிப்பெண்களும் மானசா ஸ்ரீ 574 மதிப்பெண்களும், ஆஷிகாபிலா 572 மதிப்பெண்களும் பெற்றனர். 36 மாணவர்கள் 500க்கு மேல் மதிப்பெண்களும், மானசாஸ் ஸ்ரீ வணிகவியல் பாடத்தில் 100 மதிப்பெண்ணும், குணசீலன் கணினி பயன்பாட்டில் 100 மதிப்பெண்களும் பெற்றனர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய 120 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். இதில் ஓவியா என்ற மாணவி 488 மதிப்பெண், பார்த்தசாரதி 487 மதிப்பெண்களும் ,ஹரிபிரசாத் 482 மதிப்பெண்களும் பெற்றனர். 44 மாணவ மாணவிகள் 400 மதிப்பெண்கள் பெற்றனர். கணிதத்தில் 5 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் ஒரு மாணவரும் 100 மதிப்பெண்கள் பெற்றனர். அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் தாளாளர் தமிழரசி, செயலாளர் சுஜாதா, பள்ளியின் முதல்வர் திருவேங்கடம் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News