உள்ளூர் செய்திகள்

முத்தாம்பாளையம் ஏரியை கலெக்டர் பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விக்கிரவாண்டி அருகே முத்தாம்பாளையம் ஏரியை தூர்வாரி, படகு குழாம் அமைக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2023-09-21 07:30 GMT   |   Update On 2023-09-21 07:30 GMT
  • விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், முத்தாம்பாளையம் ஏரி 145 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
  • பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு உபகரணங்கள் ஏற்படுத்திட வேண்டும்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், முத்தாம்பாளையம் ஏரியை மாவட்ட கலெக்டர் பழனி பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் தெரி விக்கையில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், முத்தாம்பாளையம் ஏரி 145 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியை தூர்வாரிடவும், மழைக்கா லத்திற் குள்ளாகவே ஏரிக்கு நீர் வரும் வழித்தட பகுதி களில் சீரமைப்பு பணிகள் மற்றும் தூர்வாரும் பணி களை மேற்கொண்டு ஏரி யில் அதிகப்படியான நீர் நிரம்புவதற்கு வழிவகை செய்ய வேண்டும். மேலும், ஏரியில் பெரியவர்களுக் கான நடைபாதை அமைத் திடவும், சிறியவர்கள் விளை யாடும் வகையில், பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு உபகர ணங்கள் ஏற்படுத்திட வேண்டும்.

மேலும், சுற்றுலாத்தள மாக உருவாக்கிடும் வகை யில், ஏரியில் படகுகுழாம் அமைப்பதற்கு உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர் களுக்கு அறிவுறுத்தப்பட் டது என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார். இந்த ஆய்வின்போது விக்கிரவாண்டி தாசில்தார் ஆதிசக்தி சிவகுமாரி மன்னன், வருவாய் அலு வலர் தெய்வீகன்.சுற்று லாத்துறை அலுவலர் ஜனார்த்தனன், பொதுப் பணித்துறை உதவி பொறி யாளர் அய்யப்பன், கோலி யனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜவேலு, கிராம நிர்வாக அலுவலர் வினோத். மற்றும் பொதுப் பணித்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News