உள்ளூர் செய்திகள்

மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கான ஆணையை வழங்கினார்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு: டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்க அறிவுறுத்தல்

Published On 2023-09-16 09:15 GMT   |   Update On 2023-09-16 09:15 GMT
  • பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது
  • முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை யினை பார்வையிட்டார்.

கள்ளக்குறிச்சி, செப்.16-

கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மரு த்துவமனையில், மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் அவர் கூறிய தாவது:- தமிழகத்தில் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மூலமாக மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக தனி வார்டுகளை அமைத்தி ட டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்ட ரிடம் கேட்டறிந்தார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைப்பெற்று வரும் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை யினை பார்வையிட்டார். பின்னர், மாணவ ர்களுக்கு சேர்க்கைக்கான ஆணைகளை மாண வர்களுக்கு வழங்கினர். இந்த ஆய்வின்போது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் உஷா, மருத்துவ கண்காணிப்பாளர் நேரு, இணை பேராசிரியர் பொற்செல்வி, சமீம் பேராசிரியர் தீபா மற்றும் அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News