சில்வார்பட்டியில் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் வினியோகம்-கலெக்டர் நேரடி ஆய்வு
- தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக வழங்கும் பணி தொடங்கியது.
- சில்வார்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
தேவதானப்பட்டி:
தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக வழங்கும் பணி தொடங்கியது. தேனி மாவட்டம் சில்வார்பட்டி,
ஜெயமங்கலம், மேல்மங்கலம், தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. சில்வார்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரேசன் கடை ஒன்றில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்து குடும்ப அட்டைதாரர் ஒருவருக்கு கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப டோக்கனை வழங்கினார்.
பின்னர் மகளிர் உரிமைத்தொகை பெறுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் வட்டாட்சியர் அர்ஜூனன், சில்வார்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம், மண்டல துணை வட்டாட்சியர் ராஜாராம் மற்றும் கனகமணி பி.டி.ஓ. விஜயமாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.