உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவன் தற்கொலை: ஆசிரியர்கள், மாணவர்கள், விடுதி: ஊழியர்களிடம் தீவிர விசாரணை

Published On 2023-08-20 07:58 GMT   |   Update On 2023-08-20 07:58 GMT
  • இது தொடர்பாக சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து மாணவனின் உடலை அவரது பெற்றோர்கள் வாங்கிச் சென்றனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதியில் நேற்று முன்தினம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அபித்குமார் (வயது 19) இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட மாணவனின் பெற்றோர், தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக சின்னசேலம் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்து மாணவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை வாங்க மறுத்த பெற்றோர், தன் மகனின் சாவிற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து மாணவனின் உடலை அவரது பெற்றோர்கள் வாங்கிச் சென்றனர்.

இந்நிலையில் தற்கொலை சம்பவம் குறித்து உண்மையை விசாரித்து பெற்றோர்களிடமும், பொதுமக்களிடமும் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமாரை விசாரணை அதிகாரியாக போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் நியமித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார், சம்பந்தப்பட்ட கல்லூரி ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும், விடுதி ஊழியர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News