ஏற்காடு அரசு மருத்துவமனையில் டாக்டர் மீது புகார்
- நேற்று 70 வயதான செல்லையா என்பவர் உடலுக்கு மிகவும் முடியாத நிலையில் உறவினர்களால் தூக்கி வரப்பட்டார்.
- பணியில் இருந்த அரசு மருத்துவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஏற்காடு:
ஏழையின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 67 மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சிகிச்சைக்காக முக்கிய சிகிச்சை மையமாக கருதப்படுவது ஏற்காடு அரசு மருத்துவமனை.
ஏற்காட்டில் ஆங்காங்கே சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் சிறிய அளவில் மருத்துவமனைகள் இருப்பினும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 67 கிராம மக்களுக்கு பெரிய மருத்துவமனையாக இது திகழ்கிறது.
இந்த மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று 70 வயதான செல்லையா என்பவர் உடலுக்கு மிகவும் முடியாத நிலையில் உறவினர்களால் தூக்கி வரப்பட்டார். அப்போது பணியில் இருந்த அரசு மருத்துவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் சிகிச்சைக்கு வந்த நபரிடம் தரக்குறைவாகவும் தகாத வார்த்தை பயன்படுத்தி கீழே தள்ளி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தகவலறிந்து வந்த போலீசாரையும் அவர் திட்டினார்.
இதுபற்றி அந்த முதியவரின் பேரன் கவுதம் ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் அளிதார். அதன் பேரில் ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.