- வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு, கும்பகோணம் ரோடு, கடைத்தெரு , தொழுவூர் , ஆலங்குடி வழியாக சென்று நீடாமங்கலம் கடைத்தெருவில் முடிவடைந்தது.
- பாதயாத்திரை திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன் தலைமையில் நடைபெற்றது.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், 75-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதயாத்திரை நடைபெற்றது.முன்னதாக வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு, கும்பகோணம் ரோடு, கடைத்தெரு , தொழுவூர் , ஆலங்குடி வழியாக சென்று நீடாமங்கலம் கடைத்தெருவில் முடிவடைந்தது .
இந்த பாதயாத்திரை திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் எஸ் .எம் .பி. துரைவேலன் தலைமையில் வலங்கைமான் நகர காங்கிரஸ் தலைவர் ராஜி, வட்டார தலைவர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் அன்பு வீரமணி ,காங்கிரஸ் தொழிற்சங்க பிரிவு மாவட்ட தலைவர் குலாம் மைதீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது .
மேலும் இந்த பாதயாத்திரையில் நாகை நாடாளுமன்ற தொகுதி மனித உரிமை கழக தலைவர் அன்பழகன், மன்னார்குடி வட்டார தலைவர் கனகவேல், மன்னார்குடி வட்டார ஒருங்கிணைப்பாளர் நெடுவை ராஜதுரை, குடவாசல் வட்டாரத் தலைவர் முனியய்யா, நகர தலைவர் செந்தில் , மன்னார்குடி விவசாய அணி தலைவர் கலியபெருமாள், கர்நாடக மாநில காங்கிரஸ் நிர்வாகி பாலசுப்பிரமணியன் ,மாநில மாணவரணி பொதுச்செயலாளர் புவனேஸ்வரன் , நன்னிலம் சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ரஹீம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.