நீர்ப்பிடிப்பில் தொடர் மழை : பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
- பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் நீர்மட்டம் கனிசமாக உயர்ந்து வருகிறது.
- வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர்:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் நீர்மட்டம் கனிசமாக உயர்ந்து வருகிறது.
இேதபோல் வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.65 அடியாக உள்ளது. வரத்து 822 கன அடி. திறப்பு 400 கன அடி. இருப்பு 2565 மி.கன அடி.
வைைக அணையின் நீர்மட்டம் 48.62 அடியாக உள்ளது. வரத்து 102 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 1818 மி. கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.40 அடியாக உள்ளது. வரத்து 23 கன அடி. இருப்பு 403.25 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 89.87 அடி. வரத்து 5 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 49 மி.கன அடி.
பெரியாறு 30.6, தேக்கடி 24.2, கூடலூர் 3.2, உத்தமபாளையம் 2.8, சண்முகாநதி அணை 2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.