உள்ளூர் செய்திகள்
கூடலூரில் புலி தாக்கிய விவகாரம்: எம்.எல்.ஏ நேரில் ஆய்வு
- மனித உயிர் பலி போவதற்குள் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கிராமத்தினர் கோரிக்கை
- கூடுதலாக தானியங்கி கேமராக்கள் பொருத்தி, வனவிலங்குகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிப்பதாக வனத்துறை தகவல்
ஊட்டி,
கூடலூர் அடுத்த தேவர்சோலை எஸ்டேட் பகுதியில் புலி தாக்கி மாடு இறந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கூடலூர் எம்.எல்.ஏ பொன்ஜெயசீலன் சம்பவ இடத்துக்கு நேரில் வந்திருந்து ஆய்வு மேற்கொண்டார்,
அப்போது அங்கு வசிக்கும் கிராமத்தினர், மனித உயிர் பலி போவதற்க்குள் அந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும், பசுவின் உரிமையாளருக்கு அதிக இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கூடலூர் தாலுக்கா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட தேவன்- 1 எஸ்டேட் பகுதியில் மாமிசஉண்ணி தாக்கி கால்நடை உயிரிழந்து இருப்பதால் அந்த பகுதிகளில் கூடுதலாக தானியங்கி கேமராக்கள் பொருத்தி, வனவிலங்குகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என தெரிவித்து உள்ளனர்.