உள்ளூர் செய்திகள்

காேப்புபடம்

அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பால் சாகுபடி பணிகள் தீவிரம்

Published On 2022-06-17 06:08 GMT   |   Update On 2022-06-17 08:16 GMT
  • 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
  • 2,074 மில்லியன் கன அடி நீர் வழங்கப்பட உள்ளது.

தாராபுரம் :

திருப்பூா் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணையானது 24 அடி கொள்ளளவைக் கொண்டது. இதில்தற்போது 13.54 அடி நீா் இருப்பு உள்ளது. இந்த நிலையில் குடிநீா்த் தேவைக்காகவும், பாசனத்துக்காகவும் ஜூன் 15 -ந்தேதி முதல் ஜூலை 4 -ந் தேதி வரையில் இரு சுற்று வீதம் தண்ணீா் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன்படி 15-ந்தேதி முதல் வருகிற 19-ந் தேதி வரையில் 5 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதன் பின்னா் 10 நாள்கள் நிறுத்திவைக்கப்பட்டு இரண்டாவது சுற்றாக ஜூன் 30-ந் தேதி முதல் ஜூலை 4 -ந் தேதி வரையில் 5 நாட்களுக்கு தண்ணீா் திறக்கப்படவுள்ளது. அணையின் இடது மற்றும் வலது கால்வாய்களின் மூலமாக நாள்தோறும் 161.57 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறக்கப்படுவதால் தாராபுரம் வட்டத்தில் 6 ஆயிரத்து 60 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வழியாகதிருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.அணையின் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட, கல்லாபுரம், ராமகுளம், கொமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர்,சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய8 ராஜவாய்க்கால்களின் கீழ் பாசன வசதி பெறும் 7,520 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்த மே 16ல், தண்ணீர் திறக்கப்பட்டது.

வரும் செப்டம்பர் 28 வரை 135 நாட்களில் 80 நாட்கள் தண்ணீர் திறப்பு, 55 நாட்கள் நிறுத்தம் என்ற அடிப்படையில் 2,074 மில்லியன் கன அடி நீர் வழங்கப்பட உள்ளது.அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டதையடுத்து பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் குறுவை பருவ நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது.வயல்களில், நாற்றங்கால் அமைத்தல், வயல்களில் உழவு பணிகள் என விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News