காமராஜர் பற்றி அவதூறு பேச்சு: மன்னிப்பு கேட்காவிட்டால் ஆர்.எஸ்.பாரதி வீடு முற்றுகை போராட்டம் நடத்தப்படும்
- பெருந்தலைவர் காமராஜர் பற்றி இனிமேல் அவதூறாக பேசமாட்டேன் என்று ஆர்.எஸ்.பாரதி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.
- 24-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
சென்னை:
நாடார் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் சென்னை போரூர் நாடார் சங்க திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார் தலைமை தாங்கினார்.இதில் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன், நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் இ.மு.சீனிவாசன் தமிழ்நாடு நாடார் சங்க பொதுச் செயலாளர் வீரக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் வீ.ஆனந்தராஜ், தட்சணமாற நாடார் சங்கசென்னை கிளை தலைவர் செல்வராஜ் நாடார், திருவல்லிக்கேணி நாடார் சங்க தலைவர் கே.சி.ராஜா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தென் சென்னை மாவட்டத் தலைவர் வைகுண்டராஜ், தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் த.விஜயகுமார், கோயம்பேடு மதுரவாயல் நாடார் சங்க பொதுச் செயலாளர் ரஸ்னா ராமச்சந்திரன் உள்பட 70-க்கும் மேற்பட்ட நாடார் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்ட னர்.
கூட்டத்தில், நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
பெருந்தலைவர் காமராஜர் பற்றியும், நாடார் சமுதாய பெண்களை பற்றியும் அவதூறு பரப்பும் வகையில் பேசி வரும் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை வன்மை யாக கண்டிக்கிறோம். பெருந்தலைவர் காமராஜர் பற்றியும், நாடார் சமுதாய பெண்கள் பற்றியும் இனிமேல் அவதூறாக பேசமாட்டேன் என்று வருகிற 21-ந்தேதிக்குள் ஆர்.எஸ்.பாரதி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையென்றால் அவரது வீட்டை 24-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.