உள்ளூர் செய்திகள்

நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவில் கட்டிடம் இடிப்பு

Published On 2023-01-25 09:15 GMT   |   Update On 2023-01-25 09:15 GMT
  • நாமக்கல் கடைவீதி அருகில் பிரசித்தி பெற்ற பலபட்டறை மாரியம்மன் கோவில் உள்ளது.
  • இக்கோவிலில் வடக்கு பகுதியில் குறிப்பிட்ட இடம் பாப்பாயி என்பவருக்கு சொந்தமானதாகும்.

நாமக்கல்:

நாமக்கல் கடைவீதி அருகில் பிரசித்தி பெற்ற பலபட்டறை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வடக்கு பகுதியில் குறிப்பிட்ட இடம் பாப்பாயி என்பவருக்கு சொந்தமானதாகும்.

அவர் தனது இடத்தை மீட்டு தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பல ஆண்டுகளாக நடைபெற்ற வந்த இந்த வழக்கு விசாரணையில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. 2 மாதத்திற்குள் ஆக்கிரமிப்பை அகற்றி இடத்தை மீட்டு ஒப்படைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று நகராட்சி, வருவாய் துறை, காவல் துறை, அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் பொக்லைன் எந்திரம் கொண்டு கோவிலின் குறிப்பிட்ட பகுதிகள் இடித்து அகற்றப்பட்டன.

கோவில் வளாகத்தில் இருந்த சாமி சிலைகள் அகற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டன. மாரியம்மன் கோவில் இடிக்கப்படும் தகவல் அறிந்து ஏராளமான பக்தர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு நிலவியது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News