ஆலங்குளம் முத்தாரம்மன் கோவிலில் அக்னி குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்
- பக்தர்கள் சிலர் கைக்குழந்தைகளுடன் அக்னிக் குண்டம் இறங்கியது மெய் சிலிர்க்க வைத்தது.
- விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் முத்தாரம்மன் கோவில் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தசரா விழாவுடன் தொடங்கியது. சனிக்கிழமை சிறுமிகளின் புஷ்பாஞ்சலி நடை பெற்றது. ஞாயிற்றுக்கிழமை 1,503 பெண்கள் பங்கு பெற்ற திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதை யொட்டி காலை பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், பூ வளர்த்தல், பால்குடம் எடுத்தல், உச்சிகால பூஜை, அன்னதானம் நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு விரதமிருந்த பக்தர்கள் அனைவரும் அக்னி குண்டம் இறங்கி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தனர். இதில் பக்தர்கள் சிலர் கைக்குழந்தைகளுடன் பக்தி பரவசத்துடன் அக்னிக் குண்டம் இறங்கியது மெய் சிலிர்க்க வைத்தது.
விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளுக்கு தர்மகர்த்தா வும், முன்னாள் எம்.பி.யுமான ராமசுப்பு தலைமை தாங்கினார். திருவிழா வையொட்டி ஆலங்குளம் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் பாது காப்புப் பணியில் ஈடுபட்டனர்.