உள்ளூர் செய்திகள்

ஊர்திரும்பிய பக்தர்கள் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவை சந்தித்து நன்றி கூறினர்.

அமர்நாத்தில் இருந்து பத்திரமாக வீடு திரும்பிய பக்தர்கள் அரசுக்கு நன்றி

Published On 2023-07-21 03:53 GMT   |   Update On 2023-07-21 03:53 GMT
  • அமர்நாத் குகை கோவிலில் இயற்கை பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூர் பகுதியை சேர்ந்த 4 பேர் உள்பட21 தமிழக பக்தர்கள் சென்றனர்.
  • தாங்கள் பத்திரமாக ஊர் திரும்ப உதவி செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

சின்னமனூர்:

ஜம்முகாஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோவிலில் இயற்கை பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூர் பகுதியை சேர்ந்த 4 பேர் உள்பட21 தமிழக பக்தர்கள் சென்றனர்.

அப்போது பனி மலையில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக சாலை துண்டிக்கப்பட்டு நடு வழியில் சிக்கி தவித்தனர். தமிழக அரசு மற்றும் தேனி மாவட்ட கலெக்டர் சம்மந்த ப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் உதவியுடன் 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கிருந்து புதுடெல்லி, சென்னை வழியாக தேனி திரும்பினர்.

தாங்கள் பத்திரமாக ஊர் திரும்ப உதவி செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவை உத்தமபாளையத்தை சேர்ந்த பாண்டி, அவரது மனைவி செல்வி, சின்னமனூரை சேர்ந்த செந்தில்குமார், ராஜாங்கம் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி கூறினர்.

Tags:    

Similar News