உள்ளூர் செய்திகள்

தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் தெப்ப உற்சவம்

Published On 2023-08-10 09:51 GMT   |   Update On 2023-08-10 09:51 GMT
  • மீண்டும் சாமி தெப்பக்குளத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
  • விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தருமபுரி,

தருமபுரி குமாரசாமிப் பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.

விழாவையையொட்டி அதிகாலை சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு தங்க கவச அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து மாலை சிவசுப்பிரமணிய சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் மேளதாளங்கள் முழங்க சாமி திருவீதி உலா நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. பின்னர் மீண்டும் சாமி தெப்பக்குளத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி கிருத்திகை தெப்ப உற்சவம் நடைபெற்றது. விழாவில் தர்மபுரி தீயணைப்பு துறை வீரர்களின் உதவியுடன் சாமி தெப்பக்குளத்திற்குள் 7 முறை வலம் வந்தார். இதையடுத்து சாமி தெப்பக்குளத்தில் பக்தர்க ளுக்கு அருள் பாலித்தார்.

பின்னர் சிறப்பு பூஜை களும், மகாதீபாரதனையும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. தெப்ப உற்சவத்தின் போது லேசான மழை பெய்ததையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மலையில் இந்த தெப்ப உற்சவம் நடந்தது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செங்குந்தர் சமூகத்தினர், அறங்காவலர் குழுவினர், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News