உள்ளூர் செய்திகள்

மகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்.

திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் மகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

Published On 2023-09-04 12:29 IST   |   Update On 2023-09-04 12:29:00 IST
  • கடந்த சில வருடங்களாக வீட்டுக்கே வராமல் இருந்ததால் குடும்ப செலவுக்கும், மகளை படிக்க வைக்கவும் முடியாமல் சிரமப்பட்டார்.
  • இது குறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (வயது 30). இவர்களுக்கு மகாலெட்சுமி (11) என்ற மகள் உள்ளார். இவர் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தராஜூக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் வீட்டுக்கு சரிவர வராமல் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். மேலும் மல்லிகாவின் நடத்தையிலும் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி யுள்ளார். கடந்த சில வருடங்களாக வீட்டுக்கே வராமல் இருந்ததால் குடும்ப செலவுக்கும், மகளை படிக்க வைக்கவும் முடியாமல் சிரமப்பட்டார்.

இது குறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது திடீரென தன் மகள் மற்றும் தன் மீது மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்த போது நடந்த விபரங்களை கூறினார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்க அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News