உடன்குடியில் 5 ஆண்டுகளுக்கு பின் குடிநீர் வசதி - பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிய மக்கள்
- பெருமாள்புரம் வடக்கு புதியகுடியிருப்பு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு சுமார் 5 வருடமாக குடிநீர் வசதி இல்லை.
- உடன்குடி பேரூராட்சி செயல்அலுவலர் பிரபா ஆகியோரின் பெறும் முயற்சியில் குடிநீர் வசதி செய்யப்பட்டு குடிநீர் செயல்பாட்டுக்கு வந்தது.
உடன்குடி:
உடன்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு வெங்கடாசலபுரம் மேல தெருவில் உள்ள பெருமாள்புரம் வடக்கு புதியகுடியிருப்பு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது, இந்த வீடுகளுக்கு சுமார் 5 வருடமாக குடிநீர் வசதியும் இல்லை. இப்பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் உடன்குடி பேரூராட்சி செயல்அலுவலர் பிரபா, பேரூராட்சி தலைவி ஹூமைரா ரமீஸ் பாத்திமா, 5-வது வார்டு கவுன்சிலர் பிரதீப் கண்ணன் ஆகியோரின் பெறும் முயற்சியில் குடிநீர் வசதி செய்யப்பட்டுகுடிநீர் வழங்குவது செயல்பாட்டுக்கு வந்தது. இதையொட்டி இப்பகுதி மக்கள் தீபாவளி பரிசாக குடிநீர் வந்ததாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் குடிநீர் வசதி ஏற்பாடு செய்தவர்கள் அனைவருக்கும் பொன்னாடைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்சியில் ஊர்தலைவர் ரமேஷ்பாபு, ஊர் நிர்வாகிகள் அலெக்சாண்டர், முருகேசன் மற்றும் முகேஷ், ஸ்ரீராம், கந்தன், கவுன்சிலர் அஸ்ஸாப் அலி உட்பட ஊர்மக்கள் பலர் கலந்து கொண்டனர்.