உள்ளூர் செய்திகள்

பெரியகுளம் நகராட்சியில் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் நடைபெற்று வருகிறது.

பெரியகுளம் நகராட்சியில் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு- தொடர் போராட்டங்களால் அதிகாரிகள் பீதி

Published On 2023-03-16 06:24 GMT   |   Update On 2023-03-19 04:21 GMT
  • நீர் முழுமையாக சுத்திகரிப்பு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகத்தை கடந்த 5 நாட்களாக நிறுத்தியுள்ளனர்.
  • பொதுமக்கள் முழுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

பெரியகுளம்:

தேனிமாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு முழுமையான குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோத்துப்பாறை அணை. இந்த அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீரை சேமித்து வைக்கப்படும் நீர் நகராட்சி பகுதி மக்களுக்கான குடிநீர் மற்றும் பாசனத்திற்காக கடந்த 22 ஆண்டுகளாக பயன்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அணையில் நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டதால் அணை நீர் முழுமையாக வற்றியது.

இதனால் அணையில் மிகவும் குறைவாக இருந்த நீரில் சட்டவிரோதமாக மீன்பிடிக்கப்பட்டதால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் 20 நாட்களாக நகராட்சி நிர்வாகம் செம்மண் கலந்த கலங்கிய குடிநீரை விநியோகம் செய்து வந்தது.

இந்நிலையில் மேலும் அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் நீர் முழுமையாக சுத்திகரிப்பு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகத்தை கடந்த 5 நாட்களாக நிறுத்தியுள்ளனர். பெரியகுளம் பகுதியில் முழுமையாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் குடிநீர் ஆலைகளில் இருந்து 25 லிட்டர் கொண்ட குடிநீர் கேன் முன்பு 30 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில் தற்போது 40 ரூபாய் வரை விலையேற்றம் செய்து விற்று வருகின்றனர்.

மேலும் பொதுமக்கள் முழுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் தனியார் குடிநீர் கேன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதோடு தனியார் குடிநீர் ஆலைகளில் இருந்து கொண்டு வரப்படும் 25 லிட்டர் குடிநீர் கேன் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விற்பனைக்காக கொண்டு வந்த உடனே விற்று தீர்ந்து விடுகிறது.

மேலும் நகராட்சி நிர்வாகத்தில் இருந்து தற்போது 30 வார்டு பகுதிகளுக்கும் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீரை விநியோகம் செய்து வருகின்றனர். இதுகுறித்து பெரியகுளம் நகராட்சி பொதுமக்கள் கூறுகையில்; 100 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த பெரியகுளம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு வந்ததே கிடையாது. தற்பொழுது செயற்கையாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அணையில் இருக்கும் நீரை கோடை காலங்களில் குடிநீருக்கு மட்டும் தேவைக்கேற்ப திறந்து விட வேண்டிய பொது ப்பணித்துறை அதிகாரிகள், தொடர்ச்சி யாக பிப்ரவரி மாதத்தில் 80 அடி வரை திறந்து விட்டதே தற்போதை ய தட்டுப்பாட்டிற்கு காரணமாகும்.

தற்காலிக குடிநீர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பொதுமக்களை அலை க்கழிக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இந்நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி தினந்தோறும் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தை அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News