உள்ளூர் செய்திகள்

16-ந்தேதி முதல் 2 நாட்கள் தேனாம்பேட்டை, வளசரவாக்கத்தில் குடிநீர் சப்ளை நிறுத்தம்- குடிநீர் வாரியம் அறிவிப்பு

Published On 2023-08-14 08:49 GMT   |   Update On 2023-08-14 08:49 GMT
  • 900 மி.மீட்டர் விட்டம் உடைய ராட்சத குடிநீர் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • நாளை மறுநாள் (16-ந்தேதி) மாலை முதல் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

சென்னை:

சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடப்பதால் அந்த பகுதிகளில் செல்லும் குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் கோயம்பேடு காளியம்மன் கோவில் தெருவில் உள்ள 900 மி.மீட்டர் விட்டம் உடைய ராட்சத குடிநீர் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதன் காரணமாக அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டலங்களில் நாளை மறுநாள் (16-ந்தேதி) மாலை முதல் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. எம்.எம்.டி.ஏ. காலனி, அமைந்தகரை, அரும்பாக்கம், சூளைமேடு, தி.நகர், தேனாம்பேட்டை, கோயம்பேடு, விருகம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி, கே.கே.நகர், அசோக் நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், சி.ஐ.டி. நகர், தாய்சா அடுக்குமாடி வளாகம் பகுதிகளில் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிப்பது நிறுத்தப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News