உள்ளூர் செய்திகள்

இளம் பெண்ணை தவறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட டிரைவர் கைது

Published On 2023-04-12 11:23 GMT   |   Update On 2023-04-12 11:34 GMT
  • திருவையாறு பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
  • இளம்பெண்ணின் குடும்பத்தினர் குறித்து ஆபாசமான முறையில் பதிவிட்டுள்ளார்.

தஞ்சாவூர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மாக்குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 34).

இவர் நெல் அறுவடை எந்திர டிரைவர்.

இவர் அம்மாக்குளத்தூரில் இருந்து நெல் அறுவடைக்காக தஞ்சை பகுதிக்கு வேலைக்கு வந்தார்.

அப்போது அவருக்கும், திருவையாறு பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து அவரை தவறானவர் என்பது போல் சித்தரித்து சமூக வலைதளத்தில் காசிநாதன் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் குறித்து ஆபாசமான முறையில் பதிவிட்டுள்ளார்.

இதனால் மனமுடைந்த அந்த இளம்பெண் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசிநாதனை தேடி வந்தனர்.

காசிநாதனின் செல்போன் டவர் காட்டிய பகுதி உட்பட பல்வேறு இடங்களில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை செய்தபோது காசிநாதன் அவரது சொந்த ஊரில் ஒரு தோப்பில் மறைந்து இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து தஞ்சை சைபர் கிரைம் போலீசார் அங்கு விரைந்து சென்று காசிநாதனை சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் அவரை கைது செய்து தஞ்சைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து நீதிபதி முன்பு காசிநாதனை ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News