உள்ளூர் செய்திகள்
மாதவரம் அருகே புதுச்சேரியில் இருந்து டீசல் கடத்தி வந்த டிரைவர் கைது
- கள்ளச்சந்தையில் டீசல் கடத்தி வரப்பட்டு மற்ற லாரிகளுக்கு விநியோகிக்கப்படுவதாக மாதவரம் பால் பண்ணை இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனுக்கு தகவல் வந்தது.
- தேவராஜ் என்பரிடம் விசாரித்தபோது பாண்டிச்சேரியில் இருந்து டீசல் கடத்தி வந்து சப்ளை செய்தது தெரிய வந்தது.
கொளத்தூர்:
மாதவரம், மஞ்சம்பாக்கம் ஏரிக்கரை சாலை அருகே கள்ளச்சந்தையில் டீசல் கடத்தி வரப்பட்டு மற்ற லாரிகளுக்கு விநியோகிக்கப்படுவதாக மாதவரம் பால் பண்ணை இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனுக்கு தகவல் வந்தது.
இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், தலைமை காவலர் சுப்பிரமணி, போலீஸ்காரர் கருப்பையா ஆகியோர் நேற்று இரவு அங்கு சென்று பார்த்தபோது ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த 13 லாரிகள் இருந்துள்ளன. ஒரு லாரியில் பெட்ரோல் பங்கில் அமைக்கப்பட்டிருப்பது போல் டீசல் போடும் பம்பு அமைக்கப்பட்டு அந்த லாரியில் இருந்த டீசல் மற்ற லாரிகளுக்கு சப்ளை செய்யப்பட்டது.
இதுகுறித்து அங்கிருந்த நாமக்கல்லை சேர்ந்த தேவராஜ் என்பரிடம் விசாரித்தபோது பாண்டிச்சேரியில் இருந்து டீசல் கடத்தி வந்து சப்ளை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தேவராஜை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.