உள்ளூர் செய்திகள்

காேப்புபடம்

உடுமலை நகரில் பகல் நேரத்தில் விதிமீறி இயக்கப்படும் சரக்கு லாரிகளால் வாகன ஓட்டிகள் பாதிப்பு

Published On 2022-06-14 05:40 GMT   |   Update On 2022-06-14 05:40 GMT
  • சரக்கு லாரிகள்முக்கிய வீதிகளில் கடைகளுக்கு முன் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது.
  • போக்குவரத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

உடுமலை:

உடுமலை நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ரோட்டில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இருப்பினும், அப்பணிகள், முழுமையடையாமல் இருப்பதால் ஆங்காங்கே தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.சிறிது நேரம் மட்டுமே நெரிசல் ஏற்பட்டாலும், விதிமீறி இயக்கப்படும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகிறது.

விதிமுறைகளை கடுமையாக்கி, நெரிசலை குறைத்தால் மட்டுமே வாகனங்கள் தடையின்றி பயணிக்கவும், மக்கள் இடையூறு இல்லாமல் நடந்து செல்ல முடியும்.இது ஒருபுறமிருக்க சரக்கு லாரிகள் நெரிசலுக்கு முக்கிய காரணமாக மாறி வருகிறது. போக்குவரத்து அதிகம் உள்ள பகல் நேரங்களில் நகருக்குள் இயக்கப்படும் சரக்கு லாரிகள்முக்கிய வீதிகளில் கடைகளுக்கு முன் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது.

பிறரின் சிரமம் குறித்து எந்த கவலையும் இன்றி பொருட்களை இறக்குகின்றனர். சரக்கு வாகனங்கள், இரவு மற்றும் அதிகாலையில் மட்டுமே நகருக்குள் வர வேண்டும். பகலில் நுழைந்தால் அபராதம் விதிக்கும் நடைமுறையை கடைபிடித்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.இது குறித்து தன்னார்வலர்கள் கூறுகையில், சில வியாபாரிகள் மக்களின் நிலை குறித்து கண்டுகொள்வதே கிடையாது. சரக்கு லாரிகள் நகருக்குள் நுழைவதைக்கண்டறிந்து தடுக்க போக்குவரத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News