சென்னை கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் தின சிறப்பு பிரார்த்தனை
- சிலுவையில் அறையப்பட்டு 3-வது நாள் உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது.
- பல்வேறு ஆலயங்களில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
சென்னை:
கிறிஸ்தவ தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி தொடங்கியது. தவக் காலத்தின் இறுதி வாரம் குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து இயேசு சீடனின் பாதங்களை கழுவி முத்தமிட்டு நான் உங்களிடம் அன்பாக இருப்பது போல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாய் இருங்கள் என்ற நிகழ்ச்சியே பெரிய வியாழனாக அனுசரிக்கப்பட்டது.
அடுத்த நாள் நேற்று முன் தினம் இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடை பிடிக்கப்பட்டு சிலுவைப் பாதை ஊர்வலம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
சிலுவையில் அறையப்பட்டு 3-வது நாள் உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சென்னையில் முக்கிய தேவாலயங்களான சாந்தோம், பெசன்ட் நகர், சின்னமலை, ராயபுரம், எழும்பூர், திரு இருதய ஆண்டவர் ஆலயம், கதீட்ரல் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
ஏராளமானோர் மெழுகு வர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சாந்தோம் ஆலயத்தில் மயிலை மறை மாவட்ட கத்தோலிக்க பேராயர் ஜார்ஜ் அந்தோனி சாமி கதீட்ரல் ஆலயத்தில் சி.எஸ்.ஐ. பிஷப் ஜார்ஜ் ஸ்டீபன் ஆகியோர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.