உள்ளூர் செய்திகள்

பொறியியல் மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் மாற்றம்: உயர்கல்வித்துறை

Published On 2023-06-22 01:49 GMT   |   Update On 2023-06-22 01:49 GMT
  • பொறியியல் கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி தொடங்குகிறது
  • கொரோனா காரணமாக 10-ம் வகுப்பு தேர்வு ரத்தானதால் 10-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்படாது

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பம் செய்யப்படும் மாணவர்களுக்கு ரேண்டம் எண்கள் வழங்கப்படும். அதன்பின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடைபெறும். ஒரே கட்ஆஃப் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அவர்கள் பெற்ற மதிப்பெண், பிறந்ததேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த நிலையில் பொறியியர் மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு ரேண்டம் எண்கள் வரிசையில் 10-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ஒரே கட்ஆஃப் மதிப்பெண் வரும்போது 10-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்படுவது வழக்கம். கொரோனா காரணமாக 10-ம் வகுப்பு தேர்வு ரத்தானதால் 10-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்படாது எனத் தெரிவித்துள்ளது.

ஜூலை 7-ந்தேதி முதல் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. அதற்கு முன் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்

Tags:    

Similar News