தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்
- வட்டார அளவிலான தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆகியவை குறித்து விளக்கி பேசினர்.
பாபநாசம்:
பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தஞ்சாவூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் வட்டார அளவிலான தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி. கண்ணதாசன் தலைமை வகித்தார். பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா , ஒன்றிய குழு துணை தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தொழில் மையத்தின் உதவி பொறியாளர் குணசேகரன், புள்ளி விவர ஆய்வாளர் ஞானாம்பாள் ஆகியோர் கலந்து கொண்டு திட்ட விளக்க உரையாற்றினர்.
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கு திட்டம், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், புதிய தொழில் முனைவர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் , அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆகியவை குறித்து விளக்கி பேசினர்.
முகாமில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.