எர்ணாவூர் நாராயணன் தலைமையில் கவர்னர் மாளிகை முன்பு நாளை ஆர்ப்பாட்டம்
- திருவொற்றியூர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நாடார் சங்கங்கள், நாடார் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- கவர்னர் உரையில் தலைவர்களின் பெயரை உச்சரிக்காததை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவொற்றியூர்:
தமிழ்நாடு நாடார் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் திருவொற்றியூர் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசு தயாரித்து அளித்த கவர்னர் உரையில் தலைவர்களின் பெயரை உச்சரிக்காத கவர்னரை கண்டித்து நாளை (வியாழக்கிழமை) மதியம் 3 மணி அளவில் கவர்னர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
நாடார் பேரவை பொருளாளர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயன், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வில்லியம்ஸ், வடசென்னை நாடார் பேரவை மாவட்ட செயலாளர் சீனிவாசன், தட்சிணாமாறநாடார் சங்க சென்னை இயக்குனர் என்.ஏ தங்கதுரை, ஆர் கே நகர் பகுதி செயலாளர் ராஜேஷ், திருவொற்றியூர் பகுதி முத்துக்குமார், நிர்வாகிகள், கருப்பையா, பாக்யராஜ் சுப்பிரமணி வெள்ளைச்சாமி, சேவியர், சிவகுமார், பத்மநாபன், ஸ்டாலின், மகளிர் அணி நிர்வாகிகள் குணசுந்தரி, மீனா, ஆனந்தி, அனிதா மற்றும் நாடார் சங்கங்கள், நாடார் பேரவை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.