ஆப்பக்கூடல்:
ஆப்பக்கூடல் அடுத்த மாக்கல்புதூரை சேர்ந்தவர் பொன்னுசாமி (44). அதே பகுதியில் சொந்தமாக மளிகை கடை வைத்து ள்ளார்.
இவருடைய கடையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்து வருவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அந்த மளிகை கடையில் சோதனை நடத்திய போது 324 குட்கா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் தோப்பூரை சேர்ந்த ஜெகதீசன் (35) என்பவரிடம் இருந்து குட்கா பொருட்கள் வாங்கி பொன்னுசாமி விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து பொன்னுசாமி தனது கடைக்கு குட்கா பொரு ட்களை கொண்டு வர போன் மூலம் ஜெகதீசனுக்கு கூறியுள்ளார். அப்போது அங்கு வந்த ஜெகதீசனை போலீசார் சோதனை செய்ததில் 599 குட்கா பொட்டலங்கள் கொண்டு வந்து இருப்பது தெரிய வந்தது.
அதனைத்தொடர்ந்து பொன்னுசாமி, ஜெகதீசன் ஆகிய 2 பேர் மீதும் ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.2,560 மதிப்புள்ள 923 குட்கா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.