யானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர்கள் படுகாயம்
- ஒற்றை யானை துரத்தி கீழே தள்ளியதில் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
- பின்னர் பர்கூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனை யில் சிகிச்சை பெற்று அவர்கள் வீடு திரும்பினர்.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதி தட்டக்கரை வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலர்களாக சுரேஷ் (35), கணேஷ் (32) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் இருவரும் வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது ஒற்றை யானை துரத்தி கீழே தள்ளியதில் சுரேசுக்கு இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
கணேசை அங்குள்ள முள் புதருக்குள் தூக்கி வீசியது. இதில் அவருக்கு சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்த ஒற்றை யானை பின்பு வனப்பகுதிக்குள் சென்றது.
இதனையடுத்து வேட்டை தடுப்பு காவலர்கள் சத்தமிட்டதை அடுத்துஅங்கு வந்த தட்டக்கரை ரேஞ்சர் பழனிசாமி மற்றும் வனக்கா வலர்கள் அவர்களை மீட்டு, முதல் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவம னையில் சேர்த்தனர்.
பின்னர் பர்கூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனை யில் சிகிச்சை பெற்று அவர்கள் வீடு திரும்பினர்.