உள்ளூர் செய்திகள்

பத்திர பதிவு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக பா.ஜனதாவினர் மீது வழக்கு

Published On 2022-12-15 14:56 IST   |   Update On 2022-12-15 14:56:00 IST
  • கோபிசெட்டிபாளையம் பத்திர பதிவு அலுவலகத்தில் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
  • இது குறித்து சார்பதிவாளர் தமிழ்செல்வி கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார்.

கோபி:

கோபிசெட்டிபாளையம் பத்திர பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றி வருபவர் தமிழ்செல்வி (56).

இவர் நேற்று பணியில் இருந்த போது பா.ஜனதாவை சேர்ந்த அரவிந்த்பாலாஜி, புவனா,விஜயலட்சுமி, லீலா மணி, நந்தகுமார் உள்பட 12 பேர் அத்துமீறி அலுவலகத்துக்கள் நுழைந்து பெரியாரின் படம் இந்த அலுவலகத்தில் உள்ளது.

ஏன்பிரதமர் மோடியின் படம் வைக்கவில்லை என்றும், பெரியார் படத்தை கழற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதற்கு சார் பதிவாளர் தமிழ் செல்வி உயர்அதிகாரிகளிடம் பேசு கொள்ளுங்கள், பத்திர பதிவுக்காக டோக்கன் போட்ட பொதுமக்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள் என்று கூறினார்.

அதற்கு பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சார்பதிவாளர் தமிழ்செல்வி கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் பா.ஜனதாவை சேர்ந்த 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

Tags:    

Similar News