திருப்பூர் குமரன் நினைவு அரங்கம் அமையும் இடம் குறித்து அமைச்சர்கள் ஆய்வு
- சென்னிமலையில் திருப்பூர் குமரனுக்கு உருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது குறித்து ஆய்வுமேற்கொள்ள ப்பட்டது.
சென்னிமலை:
சென்னிமலையில் பிறந்து நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த தியாகி திருப்பூர் குமரனுக்கு சென்னிமலையில் நினைவு அரங்கம் அமைக்க வேண்டும் என சென்னிமலை நகர மக்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
தற்போது தியாகி குமரனுக்கு நினைவு அரங்கம் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் சென்னிமலையில் உருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கு 3 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அமைச்சர்கள் பேசியதாவது:
சென்னிமலையில் பிறந்து திருப்பூரில் 1932-ம் ஆண்டு நடந்த சுதந்திர போரட்டத்தில் பங்கேற்று தேசத்திற்காக தன் இன்னுயிரை துறந்த திருப்பூர் குமரனை பெருமைப்படுத்தும் விதமாக கடந்த 2017-ம் ஆண்டு முதல் அவரது பிறந்த நாள் விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப் பட்டு வருகிறது.
தொடர்ந்து முதல்- அமைச்சர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சம்பத்நகர் பிரதான சாலைக்கு தியாகி குமரன்சாலை, சம்பத்நகர் என்று பெயர் சூட்டி சிறப்பு சேர்த்துள்ளார். அந்த வகையில் திருப்பூர் குமரனுக்கு மேலும் பெருமைப்படுத்தும் வகையில், சென்னிமலையில் உருவ சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது குறித்து ஆய்வுமேற்கொள்ள ப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த ஆய்வின் போது மாவட்ட கவுன்சிலரும், சென்னிமலை மேற்கு ஒன்றிய செயலாளருமான எஸ்.ஆர்.எஸ்.செல்வம், சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் பி.செங்கோட்டையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.பிரபு, நகர செயலாளர் ராமசாமி, சென்னிமலை யூனியன் சேர்மேன் காயத்ரி இளங்கோ, டவுன் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீ தேவி அசோக், பொதுக்குழு உறுப்பினர் சா.மெய்யப்பன், வெங்கமேடு ஈஸ்வரமூர்த்தி,
முன்னாள் மாணவர் அணி நிர்வாகி தி.சேகர், இளைஞர் அணி நிர்வாகிகள் குமராவலசு இளங்கோ, பிடாரியூர் சதீஸ், கொடுமணல் கோபால், நகர இளைஞர் அணி அசோக், ரமேஷ் என்கிற குணசேகரன், மெற்குறி தங்கவேல், அம்மா பாளையம் ஈஸ்வரமூர்த்தி, முகாசி பிடாரியூர் சி.கே. ஆறுமுகம், குமரன் பேரவை விஸ்வநாதன், சிவக்குமார், முருங்கத்தொழுவு மு.சி., துரைசாமி, எக்கட்டாம் பாளையம் அல்லி முருகன், கவுண்டிச்சிபாளையம் முருகேசன் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிள் உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.