உள்ளூர் செய்திகள்

விவசாயிகள்-பொதுமக்கள் போராட்டம்

Published On 2023-11-09 07:55 GMT   |   Update On 2023-11-09 07:55 GMT
  • மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மாதந்திர கூட்டம் நடைபெற்றது
  • அரங்கில் சுமார் 25 பேர் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

பெருந்துறை:

பெருந்துறை மாவட்ட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மாதந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் பழனிசாமி தலைமை வகித்தார்.

இதில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறி யாளர் ராஜ்குமார், பெரு ந்துறை சிப்காட் திட்ட அலு வலர் வெங்கடேசன், பொறி யாளர்கள் சுஜாதா, வனஜா, சுற்றுச்சூழல் பறக்கும் படை பொறியாளர் வினோத்கு மார், விஷ்ணு பாலன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் குழுவிற்கு 10 பேர் என்ற முறையில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நல சங்கம் ஒருங்கி ணைப்பாளர் சின்னசாமி தலைமையில் 10 பேர் முதலில் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பா.ஜ.க. பெருந்துறை நகரத் தலைவர் பூரண சந்திரன் தலைமையில் 10 பேர் 2-வதாக கலந்துக் கொண்டனர்.

பின்னர் பெருந்துறை சிப்காட் கழிவு நீரால் பாதிக்கப்பட்டோர் மக்கள் இயக்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பி னர், விவசாயிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

சிப்காட் வளாகத்திற்குள் தண்ணீர் எதுவும் வெளி யேறக் கூடாது. அப்படி இல்லை என்றால், அனைத்து கம்பெனிகளையும் மூட வேண்டும். இதுவே எங்களது கோரிக்கை இவ்வாறு அவர்கள் பேசினர்.

மேலும் சிப்காட் சுற்றி உள்ள குளங்கள் வருவாய் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த குளங்களுக்கு கழிவுநீர் வருவதை ஏன் வருவாய் துறையினர் தடுக்கவில்லை.

இதற்கு தாசி ல்தார் வந்து பதில் தரவே ண்டும் இல்லை என்றால் நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலக் கூட்ட அரங்கில் சுமார் 25 பேர் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்து வந்த பெருந்துறை டி.எஸ்.பி. ஜெயபாலன் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சை வார்த்தை நடத்தினார். அதன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News