உள்ளூர் செய்திகள்
வாடகை பாக்கி வைத்திருந்த 3 கடைகளுக்கு சீல்
- ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் கடைகள் வாடகை பாக்கி வைத்திருந்தனர்.
- 3 கடைகளையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் 2022-2023-ம் ஆண்டு க்கான சொத்து வரி, காலி இட வரி, குடிநீர் வரி, வணிக கடைகளுக்கான வாடகை வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதில் சொத்து வரி பாக்கி வைத்துள்ளவர்களின் வீட்டின் குடிநீர் இணைப்பினை துண்டித்தும், மாநகராட்சி வணிக கடைகளுக்கான வாடகை பாக்கி வைத்திருந்தால் கடைகளுக்கு பூட்டி சீல் வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி ஈரோடு மாநகராட்சிக்கு சொந்த மான நேதாஜி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள 3 கடைகள் வாடகை யாக ரூ.97 ஆயிரத்து 965 ரூபாய் மாநகராட்சிக்கு செலுத்தாமல் பாக்கி வைத்திருந்தனர்.
மாநகராட்சி அதிகாரிகள் அந்த மூன்று கடைகளுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை பணம் செலுத்தாததால் 3 கடைகளையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.