உள்ளூர் செய்திகள் (District)

மாணவர் ஒருவர் பரிசு பெற்ற போது எடுத்த படம்.

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கட்டுரைப்போட்டி பரிசளிப்பு விழா

Published On 2022-10-01 08:58 GMT   |   Update On 2022-10-01 08:58 GMT
  • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சர்.சி.வி.ராமன் 138-வது பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் அறிஞர்களின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடந்தது.
  • போட்டிக்கான பரிசளிப்பு விழா கல்லூரி உள்ளரங்கில் நடந்தது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சர்.சி.வி.ராமன் 138-வது பிறந்தநாளை முன்னிட்டும், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாகவும், விடுதலை போராட்டத்தில் அறிவியல் அறிஞர்களின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடந்தது.

இப்போட்டியை ஆதித்தனார் கல்லூரியும், அறிவியல் சங்கமும் இணைந்து நடத்தின. இப்போட்டிக்கான பரிசளிப்பு விழா கல்லூரி உள்ளரங்கில் நடந்தது.

கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக வேதியியல்துறை முன்னாள் பேராசிரியர்கள் சு.பாலகுமார், கு.ஆறுமுககனி ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

மூன்றாம் ஆண்டு வேதியியல் மாணவர் சோ. வீரமனோகரனுக்கு முதல் பரிசான ரூ.3 ஆயிரமும், மூன்றாம் ஆண்டு மாணவர் சுஜித்துக்கு 2-ம் பரிசான ரூ.2 ஆயிரமும், விலங்கியல்துறை முதலாம் ஆண்டு மாணவர் ரோஷனுக்கு 3-ம் பரிசான ரூ.ஆயிரமும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், முன்னதாக வேதியியல் துறை தலைவர் செ.கவிதா வரவேற்று பேசினார். உதவி பேராசிரியை பே.தீபாராணி நன்றி கூறினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News