உள்ளூர் செய்திகள்

விவசாய நிலத்தில் புதைக்கப்பட்ட முதியவர் உடல் தோண்டி எடுப்பு- 130 நாட்களுக்கு பிறகு நடவடிக்கை

Published On 2023-08-13 10:20 GMT   |   Update On 2023-08-13 10:20 GMT
  • முதியவர் நரசிம்மலு நாயுடுவின் உடல் வருவாய்த்துறையினர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.
  • அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

திருத்தணி:

பள்ளிப்பட்டு அடுத்த விஜயமாம்பாபுரம் பகுதியை சேர்ந்த முதியவர் நரசிம்மலு நாயுடு. கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து அவரது உடலை அப்பகு தியில் உள்ள விவசாய நிலத்தில் உறவினர்கள் புதைத்தனர்.

இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாய நிலத்தில் புதைக்கப்பட்ட முதியவர் உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து 130 நாட்களுக்கு பிறகு விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டு இருந்த முதியவர் நரசிம்மலு நாயுடுவின் உடல் வருவாய்த்துறையினர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். தோண்டி எடுக்கப்பட்ட முதியவர் உடல் பின்னர் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News