- முகாமானது காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற்றது.
- சுமார் 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதுரை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி, மதுக்கூர் அரிமா சங்கம் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு மதுக்கூர் அரிமா சங்க தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.
முகாமை தொழிலதிபர் எஸ். எஸ்.பி. பிரகாசம் தொடங்கி வைத்தார்.
முகாமானது காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற்றது.
இதில் கண் புரை, கண்ணீரெழுத்து நோய், குழந்தைகளின் கண் நோய், கிட்ட பார்வை, தூர பார்வை, வெள்ளெழுத்து ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
முகாமில், 4 டாக்டர்கள், 23 செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் சுமார் 400-க்கும் மேற்பட்ட வர்களுக்குகண்
பரிசோதனை செய்தனர்.
அதில் 142 பேர் கண் அறுவை சிகிச்சை க்காக மதுரை அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் அரிமா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அனைவரு க்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
முடிவில் மதுக்கூர் அரிமா சங்க செயலாளர் பன்னீர்செ ல்வம் நன்றி கூறினார்.