விவசாயிகள் பாமாயில் மர சாகுபடி செய்து பயன்பெறலாம்:மாவட்ட கலெக்டர் தகவல்
- விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழிப்புணர்வு காணொளி காட்சி வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- 100 சதவீத மானியத்தில் கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் மூலம்நடவு செடிகள் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வாயிலாக தேசிய எண்ணைப்பனை இயக்கத்திட்டத்தின் மூலம் எண்ணைப்பனை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழிப்புணர்வு காணொளி காட்சி வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவ ட்டத்தில் எண்ணைப்பனை திட்டத்தின் மூலமாக பாமாயில் மரம்சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தோட்டக்கலைத்துறை மற்றும் கோத்ரேஜ் அக்ரோவெட் லிமிட் இணைந்து பல்வேறு விழிப்பு ணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடி ப்படையில் அனைத்து வட்டாரங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பாமாயில் சாகுபடி குறித்து விழிப்புணர்வு காணொளி காட்சி வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது. இவ்வாகனம் ஒரு வாரத்திற்குபிரச்சார பணி மேற்கொள்ளவுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2022-2023 -ம் ஆண்டு முதல்தோட்டக்கலை துறை மூலம் 30.5 எக்டர் பரப்பளவிற்கு 2023-2024 ல் 20 எக்டர் பரப்பிற்கும் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் மூலம்நடவு செடிகள் வழங்கப்பட்டது.
எண்ணைப்பனை ஒரு எக்டருக்கு 143 மரங்கள் வரை நடவு செய்யலாம். ஒருமரத்தில் ஒரு வருடத்திற்கு 12 குலைகள் வரை அறுவடை செய்யலாம். ஒரு குலையின்சராசரி எடை 25 கிலோ. இதன் மூலம் ஒரு எக்டருக்கு 42.9 டன்கள் பழங்களை அறுவடைவதால் குறைந்தபட்சம் ரூ.5,46,000 வரை வருமானம் ஈட்டலாம். மேலும் இதன்மூலம் 25 முதல் 30 ஆண்டுகளுக்கு நிலையான மாத வருமானம் பெறமுடியும். எனவே விவசாயிகள் மாத வரு மானம் தரும் மகத்தான பாமாயில் மர சாகுபடி செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதில் வேளாண்மை இணை இயக்குநர் கருணாநிதி, தோட்டக்கலை துணை இயக்குநர்மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளா ண்மை) விஜயரா கவன், தோட்டக்கலை உதவி இயக்குநர் உமா, தோட்டக்கலை துறை அலுவலர்கள் மற்றும் விவாசயிகள் கலந்து கொண்டனர்.