உள்ளூர் செய்திகள்

காசிமேட்டில் மீன் விலை அதிகரிப்பு

Published On 2022-07-03 10:04 GMT   |   Update On 2022-07-03 10:04 GMT
  • ஞாயிற்றுக்கிழமையான இன்று மீன் வாங்க வியாபாரிகளும், அசைவ பிரியர்களும் அதிக அளவில் காசிமேட்டில் குவிந்தனர்.
  • கடந்த இரண்டு வாரங்களாக மீன்களின் விலை குறைவாக இருந்த நிலையில் தற்போது மீன்களின் விலை அதிகரித்து உள்ளது.

ராயபுரம்:

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற சுமார் 100 விசைப்படகுகள் இன்று கரை திரும்பின.

இதனால் அதிக அளவு மீன்கள் விற்பனைக்கு குவிந்து இருந்தது. பெரிய வகை மீன்களும் அதிகம் காணப்பட்டது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமையான இன்று மீன் வாங்க வியாபாரிகளும், அசைவ பிரியர்களும் அதிக அளவில் காசிமேட்டில் குவிந்தனர். இதனால் காசிமேடு மீன் விற்பனை கூடம் இன்று அதிகாலை முதல் களை கட்டியது.

மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு கடந்த இரண்டு வாரங்களாக மீன்களின் விலை குறைவாக இருந்த நிலையில் தற்போது மீன்களின் விலை அதிகரித்து உள்ளது.

வவ்வால், வஞ்சிரம், உள்ளிட்ட பெரிய வகை மீன்களின் விலை கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை அதிகமாக விற்பனையானது. கடந்த வாரம் ரூ.1100 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் தற்போது ரூ.1,300 வரை விற்கப்படுகிறது.

இதேபோல் சிறிய வகை சங்கரா, கொடுவா, பாறை போன்ற மீன்களும் ரூ.50 முதல் 100 வரை அதிகமாக காணப்பட்டது.

Tags:    

Similar News