உள்ளூர் செய்திகள்

காதி கிராப்ட்களில் சிறப்பு விற்பனையை விழுப்புரம் கலெக்டர் பழனி தொடங்கி வைத்த போது எடுத்தபடம்.

விழுப்புரம் காதி கிராப்ட்களில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனை: கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2023-10-02 09:21 GMT   |   Update On 2023-10-02 09:21 GMT
  • இம்மாவட்டத்திற்கு ரூ.1.55 கோடி விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை விழுப்புரம் கலெக்டர் பழனி இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு விழு ப்புரம் மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடு ரூ.1.50 கோடி முழுமையாக எட்டப்பட்டது. நடப்பாண்டு இம்மாவட்டத்திற்கு ரூ.1.55 கோடி விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த குறியீட்டை முழுமையாக எய்திட வேண்டும். காதி கிராப்டில் இவ்வாண்டும் சிறப்பு விற்பனையாக கதர் பாலியஸ்டர் மற்றும் பட்டு ஆகிய ரகங்களுகு்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களும், பொதுமக்களும் கதர் ஆடைகளை வாங்கி கிராம நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக காந்தியடிகளின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு கலெக்டர் பழனி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஹரிதாஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பொ) கலைமாமணி, கதர் ஆய்வாளர் ஜெயகுமார், விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன் மற்றும் கதர் கிராமத் தொழில் வாரிய ஊழியர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News