உள்ளூர் செய்திகள்

ஆளுநர் ஆர்.என்.ரவி

நீட் தேர்வில் தமிழக மாணவர் முதலிடம் - ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து

Published On 2023-06-13 19:22 GMT   |   Update On 2023-06-13 19:22 GMT
  • நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.
  • முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை:

நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகம்.

இந்நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல் 10 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்ற 4 தமிழக மாணவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ரவி, இந்த மாணவர்கள் நமது மாநிலத்தை பெருமைப்படுத்தியுள்ளனர் என புகழாரம் சூட்டினார்.

இதேபோல், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவன் பிரபஞ்சனுக்கும், முதல் 10 இடங்களில் 4 தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்றதற்கும் வாழ்த்து.

அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று, நீட் தேர்வில் சாதனை படைத்திருப்பது, வருங்கால மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Tags:    

Similar News