பத்திரப்பதிவுக்கான சேவை வரி உயர்வை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்- நிலதரகர்கள் சங்கம் கோரிக்கை
- முதல்வர் தாய் உள்ளத்தோடு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
- வீட்டுமனைகளுக்கு ரூ. 500 செலுத்தி நில வரையறை செய்து கொள்ள 6 மாத கால அவகாசத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.
சென்னை:
இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலதரகர்கள் சங்க அகில இந்திய தலைவர் விருகை வி.என். கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசுக்கு எப்பொழுதும் நிரந்தர வருவாய் ஈட்டி தரும் தொழிலாக ரியல் எஸ்டேட் தொழில் அமைந்துள்ளது. இந்த தொழிலையே நம்பி செயல்படும் ரியல் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக கடந்த 10-ந் தேதி முதல் பத்திரப்பதிவின் சேவை வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை முதல்வர் தாய் உள்ளத்தோடு மறுபரிசீலனை செய்ய வேண்டும்
பவர் பத்திரத்திற்கான கட்டணம் சொத்து மதிப்பில் ஒரு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதை கிரையப் பத்திரம் செய்யும்போது 7 சதவீத பத்திர கட்டணம் மற்றும் 2 சதவீத பதிவு கட்டணம் இவற்றில் ஒரு சதவீதத்தை குறைத்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். வீட்டுமனைகளுக்கு ரூ. 500 செலுத்தி நில வரையறை செய்து கொள்ள 6 மாத கால அவகாசத்தை உடனே அமல்படுத்த வேண்டும். பழைய வீட்டுமனையில் அமைந்துள்ள குறைந்த அளவில் உள்ள சாலையை ஒட்டி புதிய லே-அவுட் அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.