குண்டுமல்லிகை கிலோ ரூ.200 ஆக சரிவு
- திருமண விழாக்கள் இல்லாததால் குண்டுமல்லிகை கிலோ ரூ.200 ஆக சரிந்துள்ளது.
- அதேபோல் கோவில் திருவிழாக்கள் இல்லாததால் பூக்களின் தேவை குறைந்துள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் குண்டு மல்லிகை, சன்னமல்லிகை, கனகாம்பரம், அரளி, சம்பங்கி உள்பட பல வகையான பூக்கள் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.
இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது தேய்பிறை முகூர்த்தம் என்பதால் திருமணங்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை. அதேபோல் கோவில் திருவிழாக்கள் இல்லாததால் பூக்களின் தேவை குறைந்துள்ளது. இதனிடையே பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பூக்களின் விலை சரிந்துள்ளது.
குண்டு மல்லிகை பூ கிலோ ரூ.200 -க்கு சரிந்துள்ளது. அதேபோல் சன்னமல்லிகை கிலோ ரூ.160, ஜாதி மல்லிகை ரூ.200, காக்கட்டான் ரூ.80, கலர் காக்கட்டான் ரூ.60, அரளி ரூ.25, வெள்ளை அரளி ரூ.40, மஞ்சள் அரளி ரூ.40, செவ்வரளி ரூ.40, நந்தியாவட்டம் ரூ.20, சிறிய நந்தியாவட்டம் ரூ.20, சாமந்தி ரூ.80 முதல் ரூ.120, சம்பங்கி ரூ.10, சாதா சம்பங்கி ரூ.25 என விற்கப்படுகிறது.