உள்ளூர் செய்திகள்

செஞ்சி பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ள காட்சி.

திண்டிவனம், செஞ்சி பகுதிகளில் கடும் பனிப்பொழிவு

Published On 2022-11-27 08:27 GMT   |   Update On 2022-11-27 08:27 GMT
  • ஆரோவில் பகுதிகளில் வடகிழக்கு பருவ தீவிரமடைந்து கடந்த வாரம் பலத்த மழை பெய்தது.
  • பனிப்பொழிவை நடைபயிற்சி சென்றவர்கள் பார்த்து ரசித்தப்படி சென்றனர்.

விழுப்புரம்:  

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், கோட்டகுப்பம், ஆரோவில் பகுதிகளில் வடகிழக்கு பருவ தீவிரமடைந்து கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இந்த மழை சற்று ஒய்ந்துள்ள நிலையில் பனிப்பொழிவு நிலவுகிறது. பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவியது. இன்று காலை 8.00 மணி வரை பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சூரியனை பார்க்க முடியவில்லை. சாலைகளில் செல்லும் வாகனங்கள் தெரிய வில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டப்படி சென்றனர்.

இந்த பனிப்பொழிவை நடைபயிற்சி சென்றவர்கள் பார்த்து ரசித்தப்படி சென்றனர். ஊட்டியில் இருப்பது போல குளிர்ச்சியான நிலை நிலவியது. பனிப்பொழிவு காரணமாக உல்லன் ஆடைகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. பனிப்பொழிவு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் காய்ச்சல், சளி போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட் டனர். இதேபோல் செஞ்சி பகுதியிலும் அதிகளவில் பனிமூட்டம் காணப்பட்டது.

Tags:    

Similar News