மணலி கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை
- ஸ்ரீ வேணுகோபால்சாமி கோவிலில் 2 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய மூன்று சிலைகள் இருந்தன.
- இன்று காலை கோவிலின் இரும்பு கேட் உடைந்து கோவில் கதவு திறந்து கிடந்தது.
திருவொற்றியூர்:
மணலி, சி.பி.சி.எல் நகரில், ஸ்ரீ வேணுகோபால்சாமி கோவில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலில் 2 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய மூன்று சிலைகள் இருந்தன.
இந்த நிலையில் இன்று காலை கோவிலின் இரும்பு கேட் உடைந்து கோவில் கதவு திறந்து கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மணலி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சுந்தர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோவிலில் இருந்த ஸ்ரீதேவி, பூதேவி ஐம்பொன் சிலைகள் கொள்ளைபோய் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கிராம தலைவர் வெங்கடேசன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிலில் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை போன ஐம்பொன் சிலைகளின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என்று தெரிகிறது.