வெவ்வேறு சாலை விபத்துகளில் வெளிமாநில வாலிபர்-விவசாயி சாவு
- அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
- அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தருமபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தளி பகுதியில் ஏற்பட்டசாலைவிபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ரமேஷ்சந்திரன் (வயது 40) என்பவர் காயம் அடைந்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல பாப்பாரப்பட்டி அருகேயுள்ள நாகதாசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகம். விவசாயியான இவர் ஏரிக்கரை சென்றபோதுஅவ்வழியாக வந்த வாகனம் மோதி காயம் அடைந்தார்.தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள ரெங்கம்மாள் பேட்டை பகுதியை சேர்ந்த செல்லகுமார் (65) உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் குணமாகவில்லை. இதில் மனமுடைந்து அனைத்து மாத்திரைகளையும் விழுங்கி விட்டார்.அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.