கொளத்தூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள்
- விவசாயிகளிடையே விதைப்பண்ணை அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- விதைப்பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு ஆதார விதை மற்றும் உயிர் உரம் ஆகியவை மானிய விலையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேட்டூர்:
கொளத்தூர் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண்மை துறை துணை இயக்குனர் சீனிவாசன் கொளத்தூர் வட்டாரத்தில் கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் விவசாயிகளிடையே விதைப்பண்ணை அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து பயிர் வகை பயிர்களில் விதைப்பண்ணை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாசிப்பருப்பு 64 ஹெக்டேரிலும், உளுந்து 6 ஹெக்டேரிலும் பயிர் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விதைப்பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு ஆதார விதை மற்றும் உயிர் உரம் ஆகியவை மானிய விலையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விதைப்பண்ணை அமைக்கும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விதைகளை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ள விவசாயிகள் கொளத்தூர் வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையம் அல்லது உதவி விதை அலுவலர் செந்தில்வேலன் ஆகியோரை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.