உள்ளூர் செய்திகள்

ஏரியில் கிடா வெட்டி வழிபட்ட மக்கள்.

பண்ணப்பள்ளி கிராமத்தில் 15 வருடங்களுக்குப் பிறகு நிரம்பிய ஏரியில் கிடா வெட்டி பூஜை

Published On 2022-09-12 15:03 IST   |   Update On 2022-09-12 15:03:00 IST
  • தேவர் ஏரி நீர் வரத்து இல்லாமல் பதினைந்து வருடங்களுக்கு மேலாக காய்ந்துள்ளது.
  • கிராம மக்கள் ஒன்றிணைந்து விளக்கு எடுத்து மேள, தாளங்களுடன் ஊர்வலமாக வந்து ஏரியில் பூஜை செய்தனர்.

வேப்பனபள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே உள்ள பண்ணப்பள்ளி கிராமத்தில் உள்ள தேவர் ஏரி நீர் வரத்து இல்லாமல் பதினைந்து வருடங்களுக்கு மேலாக காய்ந்துள்ளது.

இந்த நிலையில் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மாதமாக பெய்த கன மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து தேவர் ஏரி நிரம்பி முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

ஏரி முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து பண்ணபள்ளி கிராம மக்கள் ஒன்றிணைந்து விளக்கு எடுத்து மேள, தாளங்களுடன் ஊர்வலமாக வந்து ஏரியில் பூஜை செய்தனர்.

மேலும் ஏரியில் ஆட்டை பலி கொடுத்து பெண்கள் பாட்டு பாடி கொண்டாடினர்.

இதை அடுத்து ஊர் மக்கள் அனைவரும் ஏரியில் விளக்கு தெப்பம் விட்டு வழிப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பண்ணப்பள்ளி மற்றும் தாமண்டரப்பள்ளி கிராமத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News