திருவாரூரில், மாநில அளவிலான தரைப்பந்து போட்டி தொடக்கம்
- 16 மாவட்டங்களை சேர்ந்த 56 அணிகள் போட்டியில் கலந்து கொண்டன.
- வெற்றிபெறும் அணிக்கு கோப்பைகளும், அணியை சேர்ந்த 20 பேருக்கு பதக்கங்களும் வழங்கப்படும்.
திருவாரூர்:
மாநில தரைப்பந்து கழகம் மற்றும் திருவாரூர் மாவட்ட தரைப்பந்து கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான 16-வது தரைப்பந்து போட்டி திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று தொடங்கியது.
இந்த போட்டியினை திருவாரூர் மாவட்ட தரைப்பந்து கழகத் தலைவர் ஹபீப் முஹமது தொடங்கி வைத்தார்.
இதில் மாநில தரைப்பந்து கழக செயலாளர் விஷ்ணுவிகாஷ், மாவட்ட தரைப்பந்து கழக செயலாளர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டி 14 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண் பெண் இருபாலருக்கும் நடைபெறுகிறது.
இதில் சென்னை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, செங்கல்பட்டு, கிரு ஷ்ணகிரி, கன்னியாகுமரி, தென்காசி, நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களைச் சேர்ந்த 56 அணிகள் பங்கு பெறுகின்றன.
ஒவ்வொரு அணியும் மூன்று முறை மற்ற அணிகளுடன் மோத உள்ளன.
இதில் இரண்டு பிரிவுகளிலும் தேர்வாகும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.
இந்த போட்டி இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது.
இதில் ஒரு அணிக்கு 20 நபர்கள் இருப்பார்கள். இதில் 6 நபர்கள் மட்டுமே களத்தில் விளையாடுவார்கள்.
மீதமுள்ள 14 நபர்கள் மாற்று ஆட்டக்காரர்களாக பயன்படுத்தப்படுவார்கள்.
மேலும் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
வெற்றி பெறும் அணிக்கு கோப்பைகளும் அணியைச் சேர்ந்த 20 நபர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.