விழுப்புரத்தில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணி சிறப்பு முகாம் எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்
- விழுப்புரத்தில்தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணி சிறப்பு முகாம் பெற்றது.
- விழுப்புரம் நகரங்களில் தூய்மைக்கான மக்கள் பணி “ என் நகரம் என் பெருமை” “என் குப்பை என் பொறுப்பு” என்ற சொல்லிற்கேற்ப துய்மை பணி நடைபெற்று வருகிறது.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணி சிறப்பு முகாமினை விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி சர்க்கரை தொடங்கி வைத்தனர்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தூய்மை இயக்கத்திற்கான பணியினை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் அதே தினத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் மக்கள் தூய்மை பணி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து விழுப்புரத்தில் மாதத்தின் 2-வது சனிக்கிழமை மற்றும் 4-வது சனிக்கிழமை அன்று விழுப்புரம் நகரங்களில் தூய்மைக்கான மக்கள் பணி " என் நகரம் என் பெருமை" "என் குப்பை என் பொறுப்பு" என்ற சொல்லிற்கேற்ப துய்மை பணி நடைபெற்று வருகிறது.
அதனையொட்டி இன்று விழுப்புரத்தில் நீர் நிலைகள் தூய்மை செய்து கரைப்பகுதிகளில் மரம் நடும் பணியினை எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், புகழேந்தி , நகர மன்ற தலைவர் தமிழச்செல்வி ஆகியோர் விழுப்புரத்தில் உள்ள அய்யனார் குளம் மற்றும் கன்னியா குளம் பகுதிகளை தூய்மையாக்கி கரைப் பகுதிகளில் மரம் நடும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் ஆணையர் சுரேந்திர ஷா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.