மரக்காணத்தில் பருவநிலை மாற்றத்தால் கடல் சீற்றம் அதிகரிப்பு: மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை
- கனமழை கடந்த சில நாட்களாக நின்று விட்டதால் பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
- கடலுக்கு செல்லாததால் மார்க்கெட்டிற்கு மீன்கள் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.
விழுப்புரம்:
மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்து வந்தது. இந்த கனமழையால் ஒரு வாரத்திற்கு மேலாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். இதுபோல் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெருமளவில் பாதிக்க ப்பட்டது. இப்பகுதியில் பெய்த கனமழை கடந்த சில நாட்களாக நின்று விட்டதால் பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
இந்நிலையில் தற்பொழுது வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று காலை முதல் பகுதியில் லேசான மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடல் அலைகளில் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இப்பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாததால் மார்க்கெட்டிற்கு மீன்கள் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. இதனால் சிறிய வகை மீன்களின் விலையும் அதிகரித்து உள்ளது என்று பொதுமக்கள் கூறுகி ன்றனர்.